‘அமுத சுரபி’ Dry Food Relief Scheme

அமுத சுரபி உலர் உணவு நிவாரணத் திட்டம்

ஒளிரும் வாழ்வு – புதுக்குடியிருப்பு அமைப்பு, முற்று முழதாக இயங்கமுடியாத மாற்றுத் திறனாளிகள், போரில் தமது பிள்ளைகளை இழந்து அல்லது காணாமல் போய் இப்பொழுது பராமப்பதற்கு யாருமின்றிய நிலையில் உள்ள வயோதிபர்கள், மற்றும் போரில் தமது பெற்றோரை இழந்து வயதான தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வாழ்ந்துவரும் பிள்ளைகள் ஆகியோருக்கு உலர் உணவு வழங்கும் அமுத சுரபி உலர் உணவு நிவாரணத் திட்டத்தை கடந்த 17-12-2016 அன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துள்ளார்.

இந்த அமுத சுரபி உலர் உணவு நிவாரணத் திட்டத்திற்கு கோண்டாவில் நலன்புரிச் சங்கம் 2017 வருடத்தில் ஒரு லட்சம் இலங்கை ரூபபாய்களை (Rs 100,000/=) வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. முதல் Rs 50,000.00 ரூபாய் நிதி ஒளிரும் வாழ்வு அமைப்பினருக்கு சித்திரை (April ) மாதம் வழங்கப்படுள்ளது. 29-04-2017 அன்று பயனாளிகளுக்கு உலர்உணவுகள் வளங்கி வைக்கப்பட்டது.

img2

img3

img4

help1

img5