Disabled Toilet Project – Mullaithivu District

மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூட வசதியினை செய்து கொடுக்கும் வேலைத்திட்டம்

கோண்டாவில் நலன் புரிச் சங்கம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில்  மாற்றுத்திறனாளிகளுக்கான 6 மலசலகூட வசதியினை செய்து கொடுக்க முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தினை பூரணமாக செய்து முடிப்பதற்கு RS 960,000 (£4560 – £4800) தேவைப்படுகின்றது.

இவ்வேலைத்திட்டமானது இலண்டன் Leiwsham சிவன் கோவில், புதுக்குடியிருப்பு ஒளிரும்வாழ்வு ஆகிய அமைப்பினரால் நேரடியாக மேற்பார்வை செய்யப்படுகிறது. அத்துடன் இத்திட்டத்தினை மேற்பார்வை செய்வதற்கென ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் காணப்படும் ஒளிரும் வாழ்வு அமைப்பினர் கன்காணிப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து பிரதேச செயலககங்களின் சமூகசேவைகள் கிளையின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் கன்காணிப்பதுடன் அந்தந்த கிராம அலுவலர்களும் நிலமைகளை மேற்பார்வை செய்வார்கள் அத்துடன் வாரந்தோறும் நடைபெறும் பிரதேசசெயலக அலுவலர்களின் ஒன்றுகூடலின்போதும் திட்டத்தின் நிலவரங்கள் குறித்து ஆராயப்படும்.

இத்திட்டம்  செய்து முடிப்பதற்கு மூன்று மாதகாலம்  தேவை என ஒளிரும்வாழ்வு அமைப்பினர்  தெறிவித்துள்ளனர்.

கோண்டாவில் நலன் புரிச் சங்க பயனாளிகளின் விபரம்

  1. முத்தையா செல்வம்
  2. கனகசுந்தரம் விஜிதரன்
  3. பரமநாதன் சசிகரன்
  4. வேலாயுதபிள்ளை பாமா
  5. அகிலன் தர்மினிதேவி
  6. TBC

புதுக்குடியிருப்பு ஒளிரும்வாழ்வு அமைப்பினர்  மொத்தமாக 32 மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூட வசதியினை செய்து கொடுக்கவுள்ளனர்.

 

[print_gllr id=477 display=short]